பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேதம் உடையதிந்த நாடு - நல்ல
வீரம் பிறந்ததிந்த நாடு;
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!


திட்டவரைவு தந்தவன்!


மகாகவி பாரதியின் செய்திகளில் மிக முக்கியமான செய்தி, ஒரு நாட்டுக்கு விடுதலை வந்தால் மட்டும் போதாது; அந்த நாடு முன்னேற்றத்திசையில் செல்ல வேண்டும் என்பது. கவிஞர்களைப் பற்றி மரபான பழமொழி ஒன்று உண்டு. அவர்கள் சட்ட மன்றத்துக்குச் செல்லாத சட்டமன்றப் பேராளர்கள் என்று மக்களைப் புரிந்து கொண்டு மக்களுக்காகச் சட்டமன்றங்கள் செய்ய வேண்டியவைகளை இவர்கள் எடுத்துச் சொல்வார்கள். இதுதான் அதன்பொருள்.

நாடு விடுதலை பெறும் என்ற நம்பிக்கை வந்தவுடன் இந்த நாட்டுக்கு ஐந்தாண்டுத் திட்டங்களை வரைந்து கொடுத்த பெருமை பாரதிக்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. ஆக நாடு விடுதலை பெற்று விட்டால் மட்டும் போதாது. இந்த நாட்டில் பெரிதும் தொழிற்புரட்சிகள் ஏற்பட வேண்டும்.

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்:
ஆலைகள் வைப்போம்"

என்று ஓர் ஐந்தாண்டுத்திட்டமே வரைந்து கொடுக்கிறான்.

"சந்திரன் இயல்கண்டு தெளிய வேண்டும்" "சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்கவேண்டும்" என்கிறான். இப்படித் திட்டங்களையும் வரைந்து கொடுத்தபெருமை பாரதிக்கு உண்டு. இத்துறையைப் பொறுத்தவரையில் பாரதியின் கனவுகள் நனவாகவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இந்தியா இந்தத் துறையில் மகத்தான