பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

147


வேண்டும் என்கிறான். அவன் ஏராளமான எண்ண அலைகளைப் பெற்றிருந்தான் என்பதிலே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எனவே முப்பது கோடி ஜனங்களுக்கும் ஒரு சங்கம் அமைத்துப் பொதுவுடைமைச் சமுதாயம் காண விரும்பினான். ஒருவர் உணவை ஒருவர் பறித்து வாழக்கூடாது என்று விரும்பினான். நம்முடைய நாட்டில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை.

சமுதாய மாற்றம்

நான் முன்னர்க் குறிப்பிட்டதைப் போல இந்தியா வளர்ந்து வருகிறது. தொழிலியலில் வளர்ந்து வருகிறது. இந்திய நாட்டின் வருவாய் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் சராசரி தனிமனிதனுடைய வருவாய்மட்டும் உயர மாட்டேன் என்று மறுக்கிறது. என்ன புதிர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தியா ஏழை நாடு அல்ல. இன்றைக்கும்! ஆனால், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். நூற்றுக்கு அறுபத்தெட்டு விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இது நமக்கு மட்டும் தென்படுகிற குறையல்ல. நம்முடைய நாட்டை ஆண்ட சுதந்தர பார்தத்தின் சிற்பியாக விளங்கிய அமரர் நேருஜி அவர்கள் பாராளுமன்றத்திலேயே சொன்னார்கள், "நாட்டின் வருமானம் உயர்ந்திருக்கிறது! சராசரி மனிதனின் வருமானம் உயரவில்லை. எங்கு போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்று! இதையேதான் இரண்டாயிரம் ஆண்டுக்ளுக்கு முன்பு திருவள்ளுவரும் சொன்னார்.

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செல்வியான்
கேடும் நினைக்கப் படும்"

என்பது திருக்குறள். "நினைக்கப்படும்" என்றால் நினைத்தால் கெட்டுப் போய்விடும் என்பதல்ல. இந்த நினைக்கப்படும்