பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

151


உண்மையாகச் சொல்கிறேன்! எனக்குப் பேசக் கூடச் சில நாட்களாக மனமில்லை!

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், வள்ளுவர் போன்றவர்கள் தோன்றி மனிதகுலத்தை ஈடேற்ற வேண்டும்! வாழவைக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார்கள்! உழைத்திருக்கிறார்கள்! இந்தக் காலத்திலும் சாதிச் சண்டைகள், மத வெறுப்புக்களைப் பார்க்கும் போது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிறதோ என்ற கவலை தோன்றுகிறது.

பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி
வாழ்வோம் இந்த நாட்டிலே.


புரியாத புதிர்


இதற்குப் படித்த சான்றோர்கள் தயவு செய்து விரைந்து முடிவு செய்யுங்கள்! எந்த மனிதனிடத்திலும் ஒரு மனிதன் தன்னை அந்நியனாகக் கருதிக் கொள்ள கூடாது. அவன் நம்மோடு பிறந்தவன்; அவன் நம்மோடு வாழ உரிமைப் பெற்றவன் என்று அவனை வாழ விடுங்கள்! அல்லது எங்கேனும் போயாவது வாழவிடுங்கள்! அவர்கள் இந்த நாட்டிலே பிறந்தவர்கள். நம்முடைய சமயத்திலே இருக்கிறார்கள்! அவர்களை இந்துக்கள் என்று சொல்வதிலே என்ன தடை? அவன் நம்மோடு வாழப் பிறந்த சகோதரன்