பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

157



கலையின் விளக்கம்



"வீடுதோறும் கலையின் விளக்கம்” என்று பாடுகிறான். இது எவ்வளவு முக்கியமான பாட்டு! இத்துறை வளர்ந்தால் வேறு பிரச்சாரத்தைக் கடுமையாக நிறுத்தலாம். நம்முடைய அரசு மிகுந்த முயற்சியோடு சில பிரச்சாரங்களைச் செய்கிறது. பணம் கூட கொடுத்துப் பார்க்கிறது. ஆனால், மக்கள் தொகை அந்த இயக்கங்களை முறியடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. உணவாலும் தண்ணிராலும் காற்றாலும் மட்டும் மனிதன் வாழ்ந்துவிட வில்லை. அவனுடைய ஆன்மாவுக்கு, உயிருக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை.

இந்தக் களிப்பும் மகிழ்ச்சியும் சராசரி மனிதனுக்கு இன்றைக்குக் கிடைக்கவில்லை. அந்தக் களிப்பும் மகிழ்ச்சியும் ஏழைக்குக் கிடைக்காமையினால் அவனுடைய வீடுகளில் அவனுக்கிருக்கிற ஒரே இன்பம் அதுதான் என்று கருதி நாட்டு மக்கள் எண்ணிக்கையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

வீடுகள் தோறும் கலையின் விளக்கம் தோன்றி அவனுக்குக் கலையில், இலக்கியத்தில், ஒவியத்தில், சிற்பத்தில், இசையில் மகிழ்கின்ற வாய்ப்புக் கிடைத்தால் அவன் அரசாங்கத்தினுடைய முயற்சியில் மிகுந்த துணை யாக இருப்பான். பழங்காலத்தில் நம்முடைய கோயில்கள் இந்தப் பணியைச் செய்தன. மாணிக்கவாசகர் அருமையாக ஒரு கோயிலைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்"


என்று சொல்கிறார்.

பழங்காலக் கோயில்களில் இசை இருந்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நாடகமன்றம் இருந்தது. மக்கள்