பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

161


தான் பயன் அதிகம். அவன்தான் மகிழ்கிறான்; அவன்தான் களிப்புறுகிறான். அவனுடைய தலைமுறைதான் வளர்கிறது. இந்த அருமையான திருமண வாழ்க்கைக்குக் கூட பெண் இன்றைக்குப் பணயமாக்கப்படுகிறாள். வரதட்சணை - பணம் - காசு என்ற பெயரால் இந்தக் கொடுமையை இன்றைக்கும் பார்க்கிறோம். எனவே பெண்களை இழிவு செய்கிற உணர்ச்சி, இன்னும் பெண்களைக் காம இச்சைப் பொருளாகவ்வே கருதுகிற மனப்போக்கு அந்த மனப் போக்கிலேயே சுவரொட்டி, விளம்பரங்கள். பத்திரிக்கை விளம்பரங்களைப் பார்த்தால் நம்முடைய நாட்டில் பாரதியின் கனவு நனவாகவில்லை என்று தோன்றுகிறது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பெண்ணை ஒரு விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துகிற, கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்துகிற அனைத்தும் தடை செய்யப்பட்டால் ஒழிய இந்த நாட்டினுடைய பெண்களுக்குத் தரமான தகுதிவராது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தத் துறையிலும் நம்முடைய நாடு பாரதியின் கனவை நனவாக்கவில்லை. அதனால் தான் பெரியார் போன்றவர்கள் கூட "பெண்ணுக்கும் ஆணுக்கும் உடையிலே கூட வித்தியாசம் தெரியக் கூடாது” என்றெல்லாம் சொன்னார். கொஞ்சம் அளவுக்கு மீறிப் போனால் என்று நான் சொல்வதுண்டு. காரணம் வேறுபாடுகளும் வேறுபட்ட உடைகளும் வேறுபட்ட அமைப்புக்களும் இருந்தால்தான் வாழ்க்கைச் சுவையாக இருக்கமுடியும். ஆகையினால் அச்சடித்த மாதிரியாக ஆணும் பெண்ணும் இருப்பது என்பது நியாயமாக இருக்கமுடியாது; உணர்வுகளுக்கு ஒத்து வராது.

எனவே பெண்மை, பெண்மையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அது நெறி காக்கும் கற்பாக மாறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கை அச்சமில்லாத துணிவுடைய வாழ்க்கையாக இருக்க வேண்டும். ஆணும்கூட