பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறிகளும் அவனுடைய கனவுகளை நனவாக்க முடியாமல் தடையாக நிற்கின்றன. இந்தச் சமுதாய அமைப்பையும் சமய அமைப்பையும் மாற்றிச் சீரமைத்து அவற்றைச் சமுதாய மாற்றத்திற்குரியவாறு தகுதிப்படுத்த வேண்டும். அல்லது ஒதுக்கி விட்டாவது இந்தச் சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் பாரதியின் கனவுகள் முழுமையாக நனவுகளாக மாறும். அந்த நாளை, அது தானே வரும் என்று எதிர்பார்க்காமல், உருவாக்க முயற்சி செய்வோமாக!


பாரதி வளர்த்த கவிதை


இந்த நாட்டின் வரலாற்றில் பாரதியார் ஒரு மையைப் புள்ளிபோல. அவர் அடிமையாகப் பிறந்தார்; அடிமையாகவே வாழ்ந்தார்; அடிமையாகவே இறந்தும் போனார். எனினும் தனது கவிதையால் இந்த நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பினார்.

திருவள்ளுவரையும், கம்பனையும்விட பாரதி வளர்ந்திருந்தார் என்று கூறலாம். கருத்தோட்டமும் நடை முறையில் இருக்கும் பாரதியின் கவிதைகளும் பாரதியின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்'

என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக்காலம்; அவர் முடியாட்சி மரபு முதலியவற்றை ஏற்றுக்கொண்டே பாடினார். எனவே தான் இயற்றியான்' என்றார். பாரதியார் மக்களாட்சி யுணர்வு மிக்கோங்கியிருந்த காலத்தில் வாழ்ந்தவர். எனவே,


'தனியொருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்தடுவோம்'