பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

171


படைத்த கவிஞனை-சிந்தனை உணர்வுடைய கவிஞனை வளரவில்லை என்று எப்படிக் கூறமுடியும்? இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்று பாடிய திருவள்ளுவருக்குப் பிறகு, தனியொருவனுக்கு உணவில்லையெனில் என்று பாடிய பாரதிக்குப் பிறகு, உலகம் உண்ண நீ உண், உடுத்த உடுப்பாய் என்று பாடிய பாரதிதாசன் பாரம்பரியத்திற்கு மேலாகத் தமிழ்த் தந்தை திரு. வி. க. பாடியிருக்கிறார்.


'அண்டையன் பசியால்வாட
அணங்கொடு மாடிவாழ்தல்
மண்டையன் குற்றமன்று
மன்னிடும் ஆட்சிக்குற்றம்'


என்று பாடுகிறார் தமிழ்த்தந்தை திரு. வி. க.

துரியோதனாதியரின் கொடுமைகளைப் பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் மிக அழகாகப் பேசுகிறார். மன்னனின் கொடுமையைப் பாரதிதாசன் பேசுகையில்


'சிரமறுத்தல் வேந்தனுக்குப்
பொழுதுபோக்கும் சிறியகதை:
நமக்கெல்லாம் உயிரின் வாதை'

என்கிறார். இரண்டே வரிகளில், ஆதிக்கத்தின் பாற்பட்ட மன்னனை-ஆட்சிக்கேட்டை வன்மையாகச் சாடுகிறார்.

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'


என்றார் பாரதியார். இதன் பொருள் பல்கலைச் செல்வங் களையும் பிற மொழிகளில் படியுங்கள் என்பதல்ல. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை நமது தமிழ் மொழியிலே ஆக்கித் தருதல் வேண்டும் என்றுதான் பாரதி கூறினார்.

துறைதோறும் நூல்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலவென நீரோடை போல வெளி