பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரவேண்டும் என்கிறார் பாரதிதாசன். அதாவது பாரதியின் கருத்தை மேலும் தெளிவாகக் கூறுவதுபோல, படித்தவர் - வெள்ளை வேட்டிக்காரர்-மேல் மட்டத்தில் வாழ்பவர்கள் ஆகியோர் எவருடைய தயவும் இல்லாமல் சாதாரணமான தமிழில்-பல்துறை நூல்களும் வெளிவர வேண்டும் என்கிறார்.

பிறிதோரிடத்தில் தமிழ் மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்' என்றார். பாரதிதாசன் சாடுவ தெல்லாம் பிற்போக்கான மதத்தையும், மதச் சடங்குகளையுமேயாகும். மதத்தின் அடித்தளமான கோட்பாடுகளை அவர் சாடவில்லை. உலகத்தில் வாழ்கின்ற எல்லா உயிர்களும் இறைவனின் திருமேனி என்பதே மதத்தின் அடித்தளக் கொள்கை, பிறருக்குத் தீங்கிழைத்து விட்டுத் தனக்கு நலன் தேடுவதான பேராசைக் கொள்கையை அன்று தொட்டே மதம் எதிர்த்து வந்திருக்கிறது.

மடமையுற்ற வாழ்க்கையை
மடங்கள் தந்த தாதலால்
கடவுளில்லை கடவுளில்லை
கடவுளென்ப தில்லையே


என்றார் நண்பர் ஜீவானந்தம். ஜீவா மதத்தை எதிர்க்கிறார் என்றால், குப்பை கூளம் நிறைந்த பிற்காலச் சமயக் கருத்துக் களைத்தான் எதிர்க்கிறார். மனித உலகத்தை அச்சத்திலிருந்து விடுதலைசெய்து, அன்புணர்ச்சியிலேயே வளர்க்க வேண்டிய மதம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. எனவேதான் பிற்காலத்தில் மதம் பல தாக்குதல்களுக்கு இலக்காக வேண்டியதாயிற்று.

பொதுவாக பக்தியிலே மனம் வளர்ந்திருக்கிற தென்றால் சிந்தையில் செம்மை வளர்ந்திருக்க வேண்டும். செழுமை மலர்ந்திருக்க வேண்டும். இன்று சோஷலிசம் பற்றிப் பெரும்பாலும் எல்லோரும் பேச ஆரம்பித்து