பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார் திருவள்ளுவர். அப்பாவைவிட மகன் அறிவு வளர்ந்தவனாகத் தானிருப்பான்; அவன் தனது தந்தை என்பதற்காக எழுத்து மரியாதை கொடுப்பான். அது போல பாரதி, கவிதையுலகத்தின் தந்தையாக விளங்குகிறார். அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்துத்தானாக வேண்டும். எனினும் மரியாதை கொடுப்பதை வைத்துக் கொண்டு பாரதிக்குப் பிறகு கவிதை இலக்கியம் வளரவில்லை என்று முடிவு செய்யக் கூடாது; முடிவு செய்யாதீர்கள். பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறது - வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனிமேலும் வளரும்.


பாரதியின் இலட்சியம்


பாரதி தமிழன் - தமிழனாகப் பிறந்து - வாழ்ந்து வளர்ந்து புகழ்க்கொடி நாட்டியவன். அவனுக்குத் தமிழ் மொழியிடத்தில் அன்பு உண்டு-ஏன் பாரதி ஒரு தமிழ்ப் பித்தன் என்று கூடக் கூறலாம்.


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்"


என்று பாடுமளவுக்கு


"தெள்ளுற்ற தமிழ் அழுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்"


என்று செம்மாந்து பேசுமளவுக்கு அவன் தமிழ்மொழியில் ஊறித்திளைத்தவன். "புத்தம் புதிய கலைகள் மேற்கே மெத்த வளர்வதால் இன்று அக்கலைகளைப் பெறாத தமிழ்ச் சாதியைப் பார்த்து, "தமிழ் சாதியே காலவெள்ளத்தில் கரைந்து அழிந்து போகஎண்ணமா? இல்லை இணையற்ற வாழ்வில் செம்மாந்திருக்க எண்ணமா?" என்று சீற்றத்துடன் மான உணர்வைத்தூண்டும் முறையில் கேட்கிறான். இந்த இடங்களையெல்லாம் நோக்கும்போது பாரதி தமிழ்