பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

187


மனிதன் பெற்றெடுத்ததுதானே மொழி? இந்தக் கருத்தில் எங்ங்னம் வேறுபாடு கொள்ள முடியும்?

"தோன்றக் கூடியனவெல்லாம் மாறக்கூடியன” என்பது மார்க்ஸ்சின் சித்தாந்தம். காரல்மார்க்ஸ்சின் கொள்கைப்படி தோன்றியது மாறுமானால் - அழியுமானால் சுதந்திர வேட்கையின் காரணமாக - சுதந்திரம் பெறுவதற்காக எழுதப்பெற்ற தேசியப் பாடல்கள் அழியக் கூடியன - காலங்கடந்தனதானே என்று விவாதிக்கின்றனர். உலகில் தோன்றிய எந்தப் பொருளும் நிலைப்பதில்ல்லை என்பது உண்மை.

நிலைத்தல் வேறு, மாறுதல் வேறு. தோன்றிய பொருள்களிடையே மாறுதல் - வளர்ச்சி உண்டு. பிறந்தது போன்று நிலைத்து நிற்றல்தான் இல்லை. பிறந்தது அப்படியே இல்லாது வளரும், மாறும். மாற்றம் அழிவல்ல, வளர்ச்சியே ஆகும்.

உலகில் தோன்றிய எல்லாம் அழிவன என்ற கொள்கை இடைக்காலச் சமயத்தில் சில சுயநலவாதிகளால் புகுத்தப் பெற்றக் கொள்கை. அது தவறு. மாற்றம் உண்டே தவிர அழிவில்லை.

பாரதியின் கவிதை காலத்திற்கேற்ற புதுப்புதுக் கருத்துக்களை மாறி மாறித் தந்துகொண்டிருக்குமே தவிர அழியாது. அன்று சிந்து நதியின்மிசை படகு விடுமாறு பாடிய பாரதி வாழ்வானானால் பாரத நாடனைத்தையும் ஒன்றாக அன்று கண்டதுபோல் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாகக் கண்டு "அமேசான் நதியின் மிசை நிலவினிலே படகு விடுவோம்” என்று பாடுவான். அன்று தன்னாட்டின் எல்லைப்போக்கில் அவனுக்குச் சிந்துதான் கிடைத்தது. இன்று சிந்துவில் இல்லாவிட்டாலும் கங்கையிலாவது படகோட்ட எந்தத் தமிழனாவது முன்வந்துள்ளானா? இவையெல்லாம் செய்ய முன்வராத தமிழன், பாரதி