பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறியபடி ஒன்றே ஒன்றினை மட்டும் முயல்கிறான் - முன்வருகிறான். சேரநாட்டுப் பெண்களை மணக்க மட்டும் முன் வருவான். தன் ஊர்விட்டு - தன் மாமனார் ஊர்விட்டு வேற்று ஊர்களுக்குச் சென்று வேலை செய்யப் பயப்படும் தமிழன் படகோட்டுவது எங்கே?

ஆகவே காரல்மார்க்ஸ், தோன்றியன அப்படியே நிலைத்திருக்க மாட்டா வளர்ச்சிக்குரியன வளரும்: என்பதைத்தான் குறிப்பிடுகின்றார்.

தேசீயம் என்பது நாட்டை நேசிப்பது மட்டும்தான் என்று சொல்கிறார்கள்.

தன்னாட்டை நேசிப்பது மட்டும் அன்று. மனிதனுடைய உணர்வு - சிந்தனை - செயல் வாழ்க்கை - வீடு - அரசு - ஆட்சி அனைத்துமே தேசியம் என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.

அழகான விளக்கம் அது. ஆங்கிலேயனை - அந்நியனை எதிப்பது - தன்னாட்டை நேசிப்பது மட்டும் தேசியமல்ல, நாட்டினுள் அமைந்த வீடும் வாழ்க்கையும், மனிதனும் அவன் கருத்தும், சிந்தனையும் அவனையாளும் அரசும் ஆட்சியும் செம்மையுடன் சிறக்க வேண்டும் என்று. உழைப்பதுதான். தேசப்பற்று. - தேசிய உணர்ச்சி, இந்த நாட்டு மக்கள் மற்றவருடன் கலந்து உரையாடும் உரையாடல் உறவு இவை எல்லாமே தேசீயம் ஆகும்.

குழந்தை தாயிடம் அன்பு செலுத்துவது இயற்கை. அது வளர்ந்த ஒருத்தியை மணந்து கொண்டபின் தாயன்புக்கு இடமில்லை. தாரத்திடமே அன்பு செலுத்துகிறான்; அது போலத் தேசபக்தியை ஊட்டுவதற்காக - சுதந்திரம் பெறுவதற்காகப் பாடப் பெற்ற பாடல்கள் அது பெற்ற பிறகு பயனற்றுப் போவது இயற்கைதானே? என்கின்றனர்.

தாயன்பு அவன் வளர்ந்த பிறகு தாரத்திடம் செல்கிறது. தாயன்பு மறக்கப்படுகிறது என்கின்றனர்.