பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாழ்பட்டது. இதைத்தான் பாரதி, 'பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை' என்று பேசுகின்றார்.

பாரதி ஒரு முழு நிறைவான கவிஞர். அவர் சமுதாயத்தினை பல்வேறு கோணங்களிலும் பார்த்தார். சமுதாயத்தினை முழுமையாகப் பார்த்தார். பார்த்து விமரிசனம் செய்தார். அவரிடத்து எஞ்சியதோ மிஞ்சியதோ இல்லை. அவர் சமுதாயத்தைப் பற்றி எப்படிப் பேசினார் என்று பாராமல், அவர் சொன்னது நாட்டுக்கு ஏற்றதா என்பதைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்; கவனம் செலுத்தவேண்டும்.

வீடு என்கிறோம். வெறும் சுவரோ, ஜன்னலோ, அடித்தளமோ மட்டும் வீடாகி விடாதே. அடித்தளம், சுவர், ஜன்னல் அத்தனையும் சேர்ந்துதானே வீடு. அதுபோல், மனித சமுதாயத்தின் கோடானுகோடி உணர்ச்சி வடிவங் களைக் கவிஞன் கவிதையாக்க வேண்டும். அப்படிப் பாடுபவன்தான் உண்மையான கவிஞன்.

பாரதியார் கைகளை - கால்களை இயந்திர, சாதனங்களை நம்பினார். எனினும் இவற்றிற்கெல்லாம் மேலாக விளங்கும் ஓர் ஈடிணையற்ற சக்தியும் உண்டு என்கிறார். இறைமைதான் மனிதனின் பரிபூரணத்துவ அமைப்பு. நேராக மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல் வாழவேண்டும் என்று பேசுகிறார். இங்கு சற்று நுட்பமாகக் கவனிக்க வேண்டும். பிறரைக் கொல்லாமல்கட அல்ல; கொல்ல நினையாமல் என்று கூறுகின்றார். உள்ளத்தால் உள்ளலும் தீது என்ற வள்ளுவர் வாக்கைப் பாரதியார் இங்கு நமக்கு நினைவுறுத்தி உள்ளத்தாலும் ஒழுக்கமுடையனவாக வாழு என்று வலியுறுத்துகிறார். இதுதான் இறைமை.

இன்றைய சமுதாயம் நைந்து மடிந்தாலும் இனிவரும் தலைமுறையாவது நைந்து மடியாமல் இன்பவாழ்வு பெறுதல்