பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை, மற்றாங்கு
            இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியல் அதனில்
            பிணைத்திடத் துணிந்தனை பெருமான்."

காந்தியடிகளின் பண்பாட்டையும் சீலத்தையும் பாடிப் பரவுவதன் மூலம் தலைவர்களுக்கு வேண்டிய குணங்களையும் ஒழுக்கத்தையும் நன்கு புலப்படுத்தி விட்டார்.

இறுதியாகத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மேலான ஒரு குணத்தைக் காட்டுகிறார் பாரதி. அதாவது தானே தலைவன் என்றெண்ணி இறுமாந்து நிலை தடுமாறிப் போகக்கூடாது. தலைவர் தலைவனாக ஆண்டவன் ஒருவன் என்றுமுள்ளான் என்பதை மறக்காமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கிறார் - வழி காட்டுகிறார் பாரதி.

ஒரு தலைவன் என்றும் எப்பொழுதும் கடவுளை மறவா உள்ளத்தனாயிருக்க வேண்டும் என்பதை எத்தனையோ இடங்களில் சுட்டிக் கொண்டே போகிறார் பாரதி, மாஜினியின் உறுதிமொழியை "பேரருள் கடவுட் திருவடி ஆணை” என்றே பாரதி தொடங்குகிறார். "ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையில் அளித்த தேசம்” என்று நினைவூட்டுகிறார். உறுதி தவறினால் "ஈசன் எனக்கு நாசமே புரிக” என்று முடிவு கட்டுகிறார்.

பரிபூரண சுதந்திரப் பிரியரான பாரதி அடிமை நிலையை எவ்வளவு வெறுத்தார் என்பதை நாம் நன்கறிவோம். அதனால்தான் "பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்" என்று வீறு கொண்டெழுகிறார். ஆனால் அப்படிச் சொன்ன வாயை மூடாமலே தொடர்ந்து "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்" என்று பூரிப்புடன் முடிக்கிறார். அன்னியர்க்கடிமை செய்வது தாழ்வையளிக்கும் என்றால், ஆண்டவனுக்கு அடிமை