பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

221


குருநானக் இந்து-இஸ்லாமிய இணைப்பில் ஒரு புதிய மதமே உருவாக்கினார். அதுதான் சீக்கிய மதம்!

இந்துக்கள், முகம்மதியர்கள் ஜாதியில் நம்மவர்களே என்பது பாரதியின் கருத்து. அதுமட்டுமல்ல, இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் குருதிக் கலப்பு உண்டு என்றும் எழுதுகிறான்.

"பாரத ஜாதி ஒன்று”-என்ற கொள்கை பாரதியின் கொள்கை உறுதியான நம்பிக்கை. பாரத ஜாதி ஒன்றுபட்டு நிற்கவேண்டும். பாரத ஜாதியினர் தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை முரசுபோல் பிரசங்கம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று பாரதி அறிவுறுத்துகிறான்.

பாரத தேசத்தில் விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருவதை, பாரதி விளக்கி, "பாரத நாட்டின் நவீன உணர்ச்சி” என்ற கட்டுரையில் எழுதுகிறான். இந்தக் கட்டுரை "இந்தியா" இதழில் வெளியான உப தலையங்கம்.

பாரதத்தில் ஒரு நவசக்தி தோன்றியிருக்கிறது என்பது பாரதியின் கருத்து. அந்நிய ஆட்சியை, கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் போராட்டத்தை கம்சன், காளிங்கள் ஆகியோருடன் கண்ணன் நடத்திய போராட்டத்துடன் ஒப்புமைப் படுத்துகிறான்.

"கண்ணன் சுயநலம் கருதி ஒரு காரியமும் செய்ய வில்லை. கொடுங்கோலர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்! அதுவும் கம்சன், காளிங்கள் திருந்துவதற்குப் போதிய காலம் கொடுத்தும் திருந்தாத நிலையிலேயே கொடுங்கோலர்களை அழிக்க வேண்டியதாயிற்று” என்று பாரதி விளக்கி எழுதுவது அறிவறிந்த விவாதம்!

இந்தியாவில் மக்களாட்சி வேண்டும். இது பாரதியின் குறிக்கோள்! ஆனால், ஆதிக்க அரசோ, மக்களின் விருப்பார்வங்களைப் புரிந்து கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்குப்