பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உண்டு. ஜனங்களிடம் தொழில் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

குருடனுக்குக் கோல் பிடித்து விடுவது என்றால் ஆயுட் காலம் முழுவதும் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாகக் கண்ணைத் திறந்துவிடுதல் மேலான உதவி. இதையே வேறு மொழியில் "நாள்தோறும் மீன் தருதலைவிட மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவதே மேல்” என்று கூறுவர்.

"மடாதிபதிகள் மடத்தின் மூலதனத்தில் ஒரு பகுதியைக் கொண்டும், பாதகாணிக்கையைக் கொண்டும் முதல் சேர்த்துத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இதனால் மக்கள் பயனுறுவர். மடங்களின் நிதியும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கப்பற் சங்கத்திற்கு மடாதிபதிகள் பொருளுதவி செய்யலாகாதா? என்று கேட்கிறான் பாரதி.

மேலும் "அன்னதானம் சுவர்ணதானத்தில் செலவேயல்லாது வரவு இல்லை. தொழில்களில், வர்த்தகத்தில் முதலீடு செய்தால் வரவும் உண்டு. தரித்திரமும் ஜனங்களை விட்டு நீங்கும்.

கொடிய வறுமை நீங்கின பொழுதே ஜனங்கள் ஆத்ம ஞானத்தில் நாட்டம் கொள்வார்கள். இந்தப் புண்ணியத்தை அந்த மடாதிபதியான ஞான சிரேஷ்டர் கட்டிக் கொள்வாரோ?" என்று பாரதி அன்று கேட்டான்.ய இது நடைபெற வேண்டும்.

பாரதி, தமிழ் ஆர்வலன், பாரதி, ஆங்கிலக் கல்வியை எதிர்த்தவன். தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தவன், பாரதி, "சக்திதாசன்" என்ற புனைப் பெயரில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சொன்னதாகச் சில செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளான்.

அவற்றுள் முதன்மையானது. "தமிழ் நாட்டார் எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். கற்கும்