பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீ வைக்கட்டுமே

249


கொண்டு அந்த ஆத்திரத்தில் 'தேடு கல்வி இலாததொருரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதம்' என்றே முழங்குகிறான். பாரதி அன்று பாடினான். இன்றையத் தமிழகம் அதைச் செயல்படுத்துகிறது. தமிழகக் கல்வியுலகில் ஒரு புதுப்புரட்சி, அரசியலிலும், ஆட்சியிலும் சிறப்புற்று விளங்கும் காமராசர் ஆட்சி தமிழகத்தின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

உயர்சாதியும், பணமும் இருந்தாலே கல்வி பெற முடியும் என்ற நிலை மாறிவிட்டது. காமராசர் ஆட்சி கல்வியைப் பொதுச் சொத்தாக்கி விட்டது. முன்பு, கல்வி பயில்கிறவர்கள், ‘உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது’ கற்க வேண்டியிருந்தது. இன்றோ, கற்பிப்பவர்கள், கற்பவர்களுக்கு உற்றுழியுதவியும், உறு பொருள்கொடுத்தும் கற்பிக்கிறார்கள். பள்ளிகள் தோறும் மதியஉணவு, பிள்ளைகள் மேனி முழுதும் சீருடை - ஓடாத கடிகாரத்தை ஓடச் செய்ய - நின்று படிக்கும் பிள்ளைகள் இருந்து படிக்க ஏற்ற சாதனங்கள் - கண்ணுக்கு விருந்தும் கல்விக்கு வளமும் தரும் கல்விக்குரிய துணைப்பொருள்கள், கல்விச்சாலைகள் - கண்கவர் கோலம் பெற, பள்ளிச் சீரமைப்பு மாநாடு, கல்வி வளர்ச்சிக்குக் கோடிக்கணக்கில் திட்டம்-அரசு மட்டுமா? இல்லை. இந்நாட்டு மக்களும் கல்வியின் தேவையைக் கருத்திற்கொண்டு அள்ளி அள்ளி வழங்குகிறார்கள்.

கல்வி மட்டுமா வளர்கிறது. கல்வியின் தரமும் உயர்ந்திருக்கிறது. நாளையத் தமிழகத்தின் அறிஞர் உலகை உருவாக்கும் திருப்பணி, மேற்பார்வைப் படிப்பில் சீரோடும் சிறப்போடும் நடைபெறுகிறது. கல்விப் புரட்சி கண்ட தலைமுறையில் வாழ்வதே நமக்குத் தனிப்பெருமை. வாழ்ந்தால் மட்டும் போதுமா? பள்ளிச் சீரமைப்பில் நமது பங்கென்ன? எண்ணத்தால், உழைப்பால், பொருளால், ஊறு

கு-VI. 17