பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - I

பாரதி, காலம் தந்த கவிஞன். இல்லை, இல்லை! ஒரு காலத்தை உருவாக்கிய கவிஞன்! அந்தக் காலத்திற்கு அவன் கவியரசனாக விளங்கினான்! அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் பாரதி, சுதந்திரக் கவிஞனாக விளங்கினான்! பாரதி காலம் சமுதாயத்தில் அரசியல் அடிமைத் தனம், பொருளாதார அடிமைத் தனம், சாதி மதங்களின் விலங்குகள், மூட நம்பிக்கைகளின் ஆட்சி, எங்கும் சிறுபிள்ளைத் தனம்-விளையாட்டுத்தனம் நிறைந்திருந்த வேடிக்கை மனிதர்கள் பெருகி வாழ்ந்திருந்த காலம்! இந்த யுகத்தில் பாரதி பிறக்கிறான்; தனக்கென ஒரு காலத்தை உருவாக்கிக் கொள்கிறான். பாரதி, அடிமையாகப் பிறந்து அடிமையாகவே செத்துப் போனான்! ஆனால், பாரதியின் ஆன்மா, சுதந்திர தேவியை தரிசனம் செய்தது. அதனால், ஆனந்த சுதந்திரப் பள்ளு பாடினான்!

பாரதி, பாரத சமுதாயத்தை முதன் முதலாகப் படைக்கிறான். பாரதிக்கு முன்பு பாரத நாட்டில் பாரத சமுதாயம் இருந்ததில்லை; எண்ணற்ற சாதிகள் இருந்தன;