பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - III

மகாகவி பாரதி, கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகின்றான். கடவுள் ஒருவர். அந்தக் கடவுள் ஒருவரும் ஊர், பெயர் இல்லாதவர், ஆனால், மக்கள் அவரவர் விருப்பம் போல வடிவங்கள், பெயர்களைக் கற்பிக்கின்றனர். அத்தகு பெயர்களில் கண்ணன் என்பதும் ஒரு பெயர். கண்ணனுக்கு உயிர்க்குல வேறு பாடு இல்லை. கண்ணன் எல்லா உயிர்களிடத்திலும் உயிர்க்கு உயிரதாக இருந்தருள் செய்கிறான்.

"எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத் தான் கண்ணபெருமான்!
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்-ஆம்!
இந்தியா உலகிற்கு அளிக்கும்!"

என்பது பாரதி வாக்கு! ஆம்! அமரர் உலகத்திற்கு எதற்காகச் சாதிமுறை? அமரர் உலகத்திலும் வேறுபாடா? வேறுபாடற்ற உலகமே அமரர் - உலகம்! இஃது இந்தியாவின் செய்தி! ஆனால், மேலை நாடுகளிலும் வெள்ளையர்-கருப்பர்,