பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் சிந்தனைகள் - III

263


யூதர்-கிறித்துவர் என்ற சண்டைகள், கலகங்கள் இருப்பதைப் பார்த்து வருந்துகிறான்! உலகத்தில் நடைபெறும் இனவழிச் சண்டைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மருந்தாக, "எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்ற செய்தியைத் தருகிறான்! ஆனால், இன்று இந்தியாவின் நிலை என்ன? சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! இந்து-முஸ்லீம் பேதா பேதங்கள்! இவை பாரதியின் சிந்தனைக்கு-ஏன்? உப நிடதக் கொள்கைக்கே முரணானவை! எல்லா உயிர்களிலும் கண்ணன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை! இது பாரதப் பண்பாட்டின் இதயம்! இந்தியாவின் சமயம்! இந்தியா அமரர் உலகத்தைக் கூவி அழைத்து வழங்கிய அப்பரடிகள் பிறந்த நாடு! ஞானாசிரியரின் விதிமுறைகளை மீறி, நரகத்தையும் விரும்பி ஏற்றுக் கொண்டு அமரர் உலகத்தை அடையச் செய்யும் மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த எம்பெருமானார் இராமாநுஜர் அவதரித்த புண்ணிய நாடு! இங்கு மதத்தின் பெயரால் கெட்ட போர் வேண்டாம்!

இந்தியா ஒரு நாடு! இமயம் முதல் குமரிவரை ஒரு நாடு! இந்தியாவில் வாழும் அனைவரும் குருதிக் கலப்புடைய ஒரே குலம்! ஒரே சிந்தனையுடைய ஒரே இனம்! இந்தியாவில் வாழும் அனைவரும் இந்திய மக்கள்! இந்தியாவில் வாழும் அனைவரும் சமம்! அவருள் உயர் பார்ப்பனரேனும் சரி, ஈனப் புலையரேனும் சரி வேறுபாடு இல்லை எல்லாரும் ஓர் நிறையே! இந்திய மக்கள் சமமாகப் பாவிக்கப் படுவார்கள்! சமூக வாழ்க்கையில் பணம் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுவதில்லை! இது பாரதி வாழ்ந்த காலத்தில்! ஆனால், இன்றோ எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாயம்! பணம் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி “ஏழைகளை” உருவாக்கியுள்ளது. ஆனால், பாரதி "எல்லாரும் ஓர் விலை” என்கிறான்! என்று எல்லாரும் ஓர் விலையாகும் நாள் வரும்! இத்துடன் பாரதி நின்று விட்டானா? பாரதி, அவன் காலத்தில் மன்னர்களைப்-