பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11
பாரதியின் இலட்சியம்


பாரதி தமிழன்-தமிழனாகப் பிறந்து-வாழ்ந்து வளர்ந்து புகழ்க்கொடி நாட்டியவன். அவனுக்குத் தமிழ்மொழி யிடத்தில் அன்பு உண்டு-ஏன் பாரதி ஒரு தமிழ்ப் பித்தன் என்றுகூடக் கூறலாம்.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்"

என்று பாடுமளவுக்கு


"தெள்ளற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்” -

என்று செம்மாந்து பேசுமளவுக்கு அவன் தமிழ் மொழியில் ஊறித் திளைத்தவன். "புத்தம் புதிய கலைகள் மேற்கே மெத்த வளர்வதால் இன்று அக்கலைகளைப் பெறாத தமிழ்ச் சாதியைப் பார்த்து, "தமிழ்ச் சாதியே காலவெள்ளத்தில் கரைந்து அழிந்து போக எண்ணமா? இல்லை, இணையற்ற வாழ்வில் செம்மாந்திருக்க எண்ணமா?” என்று சீற்றத்துடன் மான உணர்வைத் துண்டும் முறையில் கேட்கிறான். இந்த இடங்களையெல்லாம் நோக்கும்போது பாரதி தமிழ்