பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் இலட்சியம்

277


தன் இனத்தையும் பேணாதவன் என்று பொருளல்ல, எடுத்துக் காட்டாகப் பல்வேறு சிற்றாறுகள் இன்றிப் பேராறு இல்லை; பேராற்றுடன் கலவாத சிற்றாறுகளால் பெரும் பயன் இல்லை. பேராறுதான் சிறப்புடையது; சிற்றாறுகள் சிறப்புடையனவல்ல என்று ஒதுக்கித்தள்ளவும் முடியாது. பேராற்றின் மூலம் வாழ்வுக்குத் தேவையான சிறப்பு. சக்தி, மின்சாரம், போன்ற பெருஞ் சக்திகளைப் பெறமுடியும். ஆகவே பேராறுபோல பாரத தேசியம்; சிற்றாறுகள் போல பிறமொழி வழித் தேசியங்கள். பாரதி தமிழ் நாட்டையும் பார்த்தான். பாரத நாட்டையும் பார்த்தான். ஆனால் பாரத நாட்டினின்று பிரிந்த தமிழ் நாட்டை ஏற்றக் கொள்ளவில்லை ஏன்? அகில உலக தேசியத்தை விட்டுப் பிரிந்து நிற்கும் பாரத தேசியத்தையும் ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு அவன் உயர்ந்திருந்தான்-தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான்.

இங்ஙனம் பாரத தேசியத்தைக் காணும் அளவுக்கு அவன் வளர்ந்திருந்ததாலேயே காவிரியாறுபோல் பிறிதில்லை. வேங்கடம்போல பிறிதில்லை என்று பாடாது,

"இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே"
"மன்னும் இமயமலை எங்கள் மலையே"

என்று பாடுகின்றான். இங்ஙனம் பரந்துபட்ட பாரத தேசியத்தைக் கண்டதால்தான் தமிழ்நாட்டு மணமகனுக்குச் சேரநாட்டுப்பெண் வேண்டும் என்கிறான். தமிழன் தமிழ்ப் பெண்ணை மாத்திரம் மணந்து கொண்டு தமிழ் நாட்டுக்குள்ளேயே "குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டக் கூடாது" என்கிறான். மணமகளும் மணமகனும் நீர்விளை யாடச் சிந்து நாட்டுக் கரைக்குச் செல்ல வேண்டும் என்கிறான். இசைக்கும் பாடல் தெலுங்காக மிளிர வேண்டும் என்கிறான். எனவே தமிழ் மணமகன் தமிழ்த் தேசியத்தைத் தாண்டிக் கேரளத்தில் பெண்ணெடுத்து, இசையில் தெலுங்கை ஏற்று, பொருளாதாரத்திலே சிந்து நதித்