பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேசப்பற்று தேசிய உணர்ச்சிட, இந்த நாட்டு மக்கள் மற்றவருடன் கலந்து உரையாடும் உரையாடல் உறவு இவை எல்லாமே தேசியம் ஆகும்.

'குழந்தை தாயிடம் அன்பு செலுத்துவது இயற்கை அது வளர்ந்த ஒருத்தியை மணந்து கொண்டபின் தாயன்புக்கு இடமில்லை. தாரத்திடமே அன்பு செலுத்துகிறான். அது போல தேசபக்தியை ஊட்டுவதற்காக-சுதந்திரம் பெறுவதற்காகப் பாடப்பெற்ற பாடல்கள். அது பெற்ற பிறகு பயனற்றுப் போவது இயற்கைதானே?' என்கின்றனர்.

தாயன்பு அவன் வளர்ந்த பிறகு தாரத்திடம் செல்கிறது. தாயன்பு மறக்கப்படுகிறது என்கின்றனர்.

அது பொருந்தாது. உலகம் தாயன்பால் இன்று நேற்று வளரவில்லை. உழைப்பின் பயனை அனுபவிக்கும் போது பயன் நல்கிய முன்னோர் உழைப்பை மறுக்கக் கூடாது. பின்பரம்பரை முன்னோடியாக இருந்து பயன் தந்த முன்னோரை மறக்கக் கூடாது என்பதற்காகவே-நன்றியறிதல். மாம்பழத்தைத் தின்றவன் அதைத் தரும் வகையில் உழைத்த தன் முன்னோரை மறக்காது போற்ற வேண்டும் என்பதற்காக நீ உன் பின் பரம்பரைக்காக அதன் கொட்டையை நட வேண்டும் என்று கூறப் பெற்ற கருத்து சிறப்புடையது.

பாராட்டும் பண்பு-முன்னோரைப் போற்றும் பண்பு -நன்றியறிதல் சமுதாயத்திற்கு மிகமிக இன்றியமை யாததாகும். எனவேதான் எத்தகைய தீய செயல் செய்த போதிலும் இழிசெயலில் ஈடுபட்டபோதும் நன்றியறிதல் வேண்டும். "ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும் குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் கழுவாய் உண்டு” என்ற புறநானூறு,

"ஒருவன் செய்தி கொன்றார்க்கு
உய்தி இல்லென அறம்பாடிற்று"