பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிறந்த பிறப்பால்-பாரத நாட்டுக் குடிமகன் என்ற ஒத்த நிலையால் ஒன்றாய் இருக்கும் நம்முன் பொதுவாகக் கருத்து வேறுபாடிருக்கக் கூடாதாயினும் ஆங்காங்கு கருத்து வேறுபாடு உண்டாவது இயற்கை. அப்படிக் கருத்து வேறுபாடு கொண்டவனை நோக்கித் தாழ்த்தி. இழித்துப் பழித்துப் பேசுவது தவறு. தாம் கொண்ட வேறுபட்ட கொள்கைகளுள்ளும் ஒற்றுமை காண்டதுதான் அறிவுடைமை. வேறுபட்ட புளிப்பும் கார்ப்பும் உவர்ப்பும் துவர்ப்பும் கசப்பும் இனிப்பும் சேர்ந்து அறுசுவை உணவு அமைதல் போல வேறுபட்ட கொள்கைகளின் அடிப்படையிலும் ஒற்றுமை காணாது- காண முயற்சிக்காது. அக்கொள்கை உடையவரைக் குறைத்துப் பேசுவது தவறு என்று கண்டிக்கும் பாரதியின் தேசியப் பாடல் வேண்டாவா?


"இனி ஒரு விதி செய்வோம்-அதை
எந்தநாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்"

பசிப் பிரச்சனை இன்றைய நிலையில் ஒரு நாட்டுப் பிரச்சனையாக மட்டுமல்லாது உலகப் பிரச்சனையாகவும் ஆகிவிட்டது "ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேர் சோறின்றி உலகில் இறந்துவிடுகிறார்கள்" என்று அமெரிக்காவில் கூடிய அகில உலக உணவு மாநாட்டு அறிக்கை கூறுகிறது. ஒன்று அனைவர்க்கும் சோறுபோட வேண்டும்; இன்றேல் பாரதிக் கருத்துப்படி உலகத்தை அழிக்க வேண்டும்-செய்தோமா? உள்ளத்துண்ர்வைத் தூண்டி, உண்பதை மறைக்காதே, உதவி வாழ் என்பதை மாற்றிப் புது விதி வகுக்கச் சொன்ன அப்பாடல் வேண்டாவா? வீர மன்னன் சிவாஜியின் மொழியில் வைத்துப் பாரதி கூறும் சொற்கள், எல்லையில் சீனர் தரும் தொல்லைகளை ஒட்டப் பாடுபட்டுக் கொண்டு வரும் நமக்கு, நல்லுணர்வு ஊட்டுவனவாய் உள்ளன. சிவாஜியின் சொற்களை அப்படியே இன்று பயன்படத்தின