பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி வலியுறுத்துவது எது?

293



உணவுக்காக நாம் உணவு சமைப்பதில்லை. உண்பதற்காக-உண்டு உயிர் வாழ்வதற்காகவே உணவு சமைக்கிறோம். அதுபோல பாரதியார், கவிதைக்காக-வெறும் கவிதையுணர்வுக்காகக் கவிதை பாடவில்லை. இந்த நாட்டு மக்ளள் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே-அந்த இலட்சியத்துடனேயே கவிதை பாடினார்.

கேள்வி கேட்டால் பாவம்-கேள்வி கேட்டது குற்றம் என்ற குறுகிய எல்லைக்குள் நாம் வாழ்ந்து விட்டோம்வளர்ந்து விட்டோம். எனவே இந்த நாடு கருத்து வழிபாழ்பட்டது. இதைத்தான் பாரதி, ‘பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்தன்னை என்று பேசுகின்றார்.

பாரதி ஒரு முழு நிறைவான கவிஞர். அவர் சமுதாயத்தினை பல்வேறு கோணங்களிலும் பார்த்தார். சமுதாயத்தினை முழுமையாகப் பார்த்தார். பார்த்து விமரிசனம் செய்தார். அவரிடத்து எஞ்சியதோ மிஞ்சியதோ இல்லை. அவர் சமுதாயத்தைப் பற்றி எப்படிப் பேசினார் என்று பாராமல், அவர் சொன்னது நாட்டுக்கு ஏற்றதா என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். கவனம் செலுத்த வேண்டும்.

வீடு என்கிறோம். வெறும் சுவரோ, சன்னலோ, அடித்தளமோ மட்டும் வீடாகிவிடாதே. அடித்தளம், சுவர், சன்னல் அத்தனையும் சேர்ந்துதானே வீடு. அது போல, மனித சமுதாயத்தின் கோடானுகோடி உணர்ச்சி வடிவங்களைக் கவிஞன் கவிதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பாடுபவன்தான் உண்மையான கவிஞன்.

பாரதியார் கைகளை-கால்களை இயந்திர சாதனங்களை நம்பினார். எனினும் இவற்றிற்கெல்லாம் மேலாக விளங்கும் ஓர் ஈடிணையற்ற சக்தியையும் உண்டு என்கிறார். இறைமைதான் மனிதனின் பரிபூரணத்துவ அமைப்பு. நேராக