பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி காட்டும் வழி

301


வாழ்ந்தமையே. அவற்றையெல்லாம் கண்ட பாரதியார் மனமார வாய் நிறைய வாழ்த்துகிறார். அந்தக் கவிதையைப் பார்ப்போம்:

"கல்வியைப்போல் அறிவும், அறிவினைப்போலக்
கருணையும் அக்கருணை போலப்
பல்விதஊக் கங்கள் செயும் திறனும்
ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில்லிறவாற் போர் செய்தல் பயனிலதாம்
என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர் செய்வோன்;
பிறர்க்கன்று தனக்குழையாத் துறவி யானோன்"


இதன் மூலம் தலைவர்களுக்குக் கல்வியும், அறிவும், கருணையும், ஊக்கமும், தீர்க்காலோசனையும், தன்னலத் துறவும் எவ்வளவு அவசியம் என்பதைப் பாரதியார் உணர்த்துகிறார். தமிழ் இலக்கியங்களிலெல்லாம் மிகச் சிறந்த பண்பாடாகப் பேசப்படுகின்ற தன்னலத் துறவு அறிந்தின்புறத்தக்கது.

"தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே"


இவ்வுலகம் உண்டென்று கூறுகிறது புறநானூறு. "தனக்கென்று ஒன்றானும் உள்ளான். பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்” என்பது குண்டலகேசி. "தனக்கென வாழாப் பிறர்க்குயிராளன்” என்பது அகநானூறு "பிறர்க்கற முயலும் பெரியோய்” என்பது மணிமேகலை. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் தலைவனுக்கு இந்தத் தன்னல மறுக்கும் பண்பு அமையாதிருக்குமானால் அவன் தலைமை நல்ல பயனை விளைவிக்காது; அவனது தலைமையும் மக்கள் சக்தியால் மாற்றப்பட்டு விடும். எத்தனையோ பேரரசுகள் மறைந்தொழிந்தமையே இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டும். மகாகவிபாரதியின் இந்தத் தன்னல மறுப்பு