பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

319


கிறது. சமயநெறி "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்" என்று ஒதுகிறது. ஆயினும், சமயநெறியில் துறைதோறும் சாதிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏன்? சாதிப்புன்மைகளை அறவே அகற்றாத வரையில் சமய நெறிகள் மனிதகுலத்திற்குத் தீமையே செய்யும் என்பதை எண்ணுக.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளில் கடவுட் கொள்கை தோன்றியது. தமிழ் மரபுவழி கடவுட் கொள்கை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தவை பேரறிவு வேட்கையும், பேராற்றல் வேட்கையுமேயாகும். தம்முடைய அறிவையும் ஆற்றலையும்விட ஏதோ ஒன்று அறிவும் ஆற்றலும் மிக்கு விளங்குகிறது என்று இந்த வியத்தகு உலகின் அமைவையும் ஒழுங்குகளையும் முறை பிறழா நிகழ்வு களையும் கண்டபோது உய்த்துணர்ந்தனர். அதனால் அந்த அறிவு ஆற்றல் எது என்று விவரிக்க முடியாமற் போய்க் கடவுள் என்று அதனை அழைத்தனர். காலப்போக்கில் மனிதன் திறமைசாலியாகவும் சாமர்த்தியமாகவும் வாழத் தொடங்கியபோது மதங்களைக் கண்டான். கடவுள் உய்த்துணரப் பெற்ற ஒன்று.

"ஓர் கடவுள் உண்டு-தம்பி
உண்மை கண்ட நாட்டில்!”

(பாரதிதாசன் கவிதைகள் தொகு-3 ஏற்றப்பாட்டு-55)

என்ற பாரதிதாசன் பாடல் இக்கருத்தினை அரண் செய்வதாகும். அந்த ஒன்றை அறிவு புலனால் தேடும் நெறியே, மெய்ப்பொருள் நெறியாயிற்று. மதங்கள் செய்யப்பட்டவை. மதங்களும் காலப்போக்கில் பெருநெறிகள்-சாராமல், சிறுநெறிகள் சார்ந்து விட்டன; மனிதர்களையும் கெடுக்கத் தொடங்கின. அதனால் மனிதகுல மேம்பாடு மனித நேயம் முதலியவற்றிற்கு முரணாக மதங்கள் இயங்கத் தலைப்பட்டன. அதன்பிறகுதான் மதங்களுக்கு எதிர்ப்புகளும்