பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"கற்பதுவே உன்முதற் கடமை”

என்று ஆற்றுப்படுத்துகின்றான். பாவேந்தன் தமிழ்வழிக் கல்வியை வற்புறுத்திப் பாடுகின்றான். கல்வி நலம் எல்லாருக்கும் என்று முரசறைந்தவன் பாவேந்தன்! இந்த முரசு ஓயாது ஒலிக்கட்டும்!


சுதந்திரத்தின் அருமை

பாவேந்தன், சுதந்திரமான சிந்தனையாளன்; கவிஞன். மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான்; பின் அவனே அடிமை விலங்குகளை மாட்டிக் கொள்கின்றான் என்பதே வரலாறு. நமது பாவேந்தன் பாரதிதாசன் சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து பாடுகின்றான். சுதந்திரம் என்பது ஒருவன் கொடுத்து, ஒருவன் பெறுவதன்று. அவனவனே பெற்றுக் கொள்வதுதான் சுதந்திரம். சுதந்திரத்தினை வேண்டி நிற்பாரைப் பார்த்து, பாரதிதாசன் "சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!” என்று கேட்கின்றான். கடையில் சுக்கு, மிளகு வாங்குவது போல், சுதந்திரத்தை வாங்கமுடியாது. சுதந்திரம் கடைச் சரக்கன்று. சுதந்திரம் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் உரிய பரிசு.


இளந்தமிழன் ஏற்றம் பெறுக

இளந்தமிழர்க்குப் பாவேந்தனின் அறிவுரை மிகவும் பயன்படக்கூடியது. "வாளினை எடடா!” என்ற கவிதை சிறப்பானது. கவிதைத் தலைப்புத்தான் இப்படி அமைந்து விட்டது! கவிதைக்குள் ஆக்கப் பணிகள் பலவற்றைப் பாவேந்தன் பட்டியல் போட்டுக் காட்டுகின்ற அருமையே, அருமை!

கலைகள் தழுவாத வாழ்க்கை வறட்சித் தன்மை யுடையது. கலைமலிந்த சீர் வாழ்வு தேவை. கலையை வளர்க்க வேண்டும். கலையின்பத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விடாமல் தொழில் பல செய்தல் வேண்டும். நல்ல