பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்நிலமே!-உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!”

(பாரதிதாசன் கவிதைகள் 1 பக் 156-1 & 2)

என்பதை அறிவோம்.


அடுத்து, ஆர்ப்பரவத்துடன் இயங்கும் இயந்திரங்கள்! இந்த இயந்திரங்களின் வரலாறு என்ன? இந்த இயந்திரங்கள் இரும்புத் துண்டுகள் - அவ்வளவுதான்! ஊர்த் தொழி லாளர்கள் ஒன்று சேர்ந்து உழைத்து இயந்திரமாக்கினார்கள். இதுவே இயந்திரங்களின் வரலாறு! இயந்திர உலகுக்கும் தொழிலுக்கும் தந்தை நிலையிலுள்ளவர்கள் உழைப்பாளிகளே!


"ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்கனே!-உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ?-நீங்கள்
ஊர்த் தொழி வாளர் உழைத்த உழைப்பினில்
உதித்தது மெய் அல்லவோ!

(பாரதிதாசன் கவிதைகள் 1 பக் 156-5)

என்று பாடுகின்றான்.

இங்கனம் உழவுக்கும் தொழிலுக்கும் உயிர்ப்பாக விளங்கும் உழைப்பாளிகளின் நிலை என்ன? அவர்களிடம் நிலம் இருக்கிறதா? இயந்திரசாலைகள் உள்ளனவா? உழைக்கும் கருவிகளாகிய கையும் காலும்தான் மிச்சம்! மண்ணைப் போர்த்து விளங்கும் பசுமையும் இயந்திரங்களும் உண்மையான சாட்சி, உழைபபாளிகளின் படைப்பு என்று கூற! ஆனால், இந்த உழைப்பாளிகள் அடைந்தது என்ன? கூலி உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்! நிலமே பாயாகவும் கையே தலையணையாகவும், வானே