பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகல்வும்; தருமம்
மறுபடி வெல்லும்" எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகம்கற்கும் வழிதேடி விதி
இந்தச்செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம், காலம்மாறும்
தருமத்தை அப்போது வெல்லக்காண்போம்,
தனுவுண்டு காண்டீயம் அதன் பெயர்”

என்கின்றான். தரும நம்பிக்கையும் அத்தோடு தன்னம்பிக்கையும் தலைவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை வையத்தலைவன் பாரதி நன்றாக எடுத்துக் காட்டுகிறான். இல்லையா? காந்திய உணர்விலே ஊறிய பாரதி தலைவர்களுக்குச் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்; கொள்கை வேறு; வாழ்க்கை வேறு என்று இருக்கப்படாது. அப்படி மாறுபட்டிருப்பவர்கள் சமுதாயத் துரோகிகள் என்று வசனத்தில் எழுதுகிறார். நிலையான வெற்றி வேண்டில், அறமான செயல் வேண்டும் என்பது பாரதி காட்டும் வழி. "ஜெயம் நிலையாகச் செய்தற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம்" என்று மாஜினியின் மூலம் நமக்கு எடுத்து விளக்கு கிறார். மேலும் மாஜினியின் மூலமே பூரணத் தியாகத்திற்குத் தயாராக இருப்பவனே தலைவனாவான் என்பதை

"என்னுடன்ஒத்த தருமத்தை யேற்றார்
இயைந்த இவ்வாலிபர் சபைக்கே
தன்னுடன் பொருளும், ஆவியுமெல்லாம்
தத்தமாய் வழங்கினேன்"

என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். ஒரு தலைவன் சர்வாதிகார மனப்பான்மையின்றி தன்னுடன் உழைப்போர் மனமறிந்து ஒற்றுமைப்பட்டு தான் என்றும் ஊழியனே என்ற