பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

329


வாயிலாகக் கிடைக்கும் கருத்து முழுமையாக இருக்க முடியாதல்லவா? வறுமையையும் ஏழ்மையையும் பழங்காலத்தில் பிரித்துப் பார்த்ததில்லை. இரண்டும் ஒன்றேயாகத்தான் பேசப்பெற்றுள்ளன. ஆனால், மனித நுகர்வுகள் வளர்ந்து வந்துள்ளன. நுகர்வுப் பொருள்களின் சந்தை வளர்ந்து கொண்டே வருகின்றன. உண்மையைச் சொல்லப் போனால் வையகத்தின் வரலாற்றை நீட்சி பெறச் செய்யும் படைப்புக்களைவிட இன்று நுகர்வுப் பொருள்களே அதிகமாகப் படைக்கப்படுகின்றன. இன்றைய நாகரிகத்தை " நுகர்வு நாகரிகம் ” (Consuming Culture) என்று சொன்னால் கூடத் தகும். ஆதலால், வறுமையும் பலவகையான பிரிவுகளுக்கு உரியதாகின்றது. நமது நாட்டு அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் என்று ஒரு கணக்கு எடுத்து அறிவித்துள்ளது. நமது மக்கள் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் 58.9 விழுக்காட்டினர். வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்கின்ற இந்த மக்களும் நான்கு வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.3,500/- ரூ.4,500/- ரூ. 5,000/- ரூ.6,400/- என்ற அளவு காட்டி வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்பிரிவினர் ஆண்டு ஒன்றுக்கு, ரூ. 3,500/-க்கும் குறைவாக ஈட்டுபவர்கள். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ. 10/- கூலி பெறுபவர்கள். ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்தாலும் பெறுவது ரூ. 20/-தான். இன்றைய விலை நிலவரத்தில் 5 பேர் உள்ள குடும்பம் வயிறார உண்ணமுடியுமா? ஒரு வேளைகூடப் பசியார உண்ண இயலாத குடும்பம் இது. இப்படிப்பட்ட குடும்பங்களை நாம் ஏழைக் குடும்பங்கள் என்று கூறுகின்றோம். கடையாகக் குடும்ப வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6,400/- இந்த வருவாயும் இன்றைக்குப் பற்றாக் குறைதானே! மற்ற வகையினர் ரூ. 4,500/- ரூ. 5,000/- ஆண்டு ஒன்றுக்கு வருவாய் வரும் குடும்பங்கள். இன்றைய நிலையில் சந்தை நிலவரத்தில் இந்த வருவாயில் ஒரு குடும்பத்தை