பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

333


இதயங்களை இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! கவிஞன் "உலகம் உண்ண உண்: உலகம் உடுத்து உடுத்து!" என்று ஆணை இடுகின்றான்.

எங்கும் போர்! ஏன் போர்! சிலர் போராடுவதையும் மக்களுக்குத் தொல்லைகள் தருவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். இதனைப் பாரதிதாசன் "கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்று பாடுகின்றான். மனிதன் வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். எந்த மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்? உழைத்து உலகத்தை உருவாக்கி இயக்கும் மனிதன் வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்! அவனுடைய உழைப்பு கொள்ளை போகிறது! எல்லாம் அவனுடைய செயலே என்ற மதத்தின் மந்திர மொழியுடன் உழைப்பவன் செல்வம் பறிபோகிறது. பாவேந்தன் பாரதி தாசன் தொழிலாளர்களை உசுப்பி விடுகின்றான். தொழி லாளிகளின் உரிமைக்குரல் இதோ!

"செப்புதல் கேட்பீர் - இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல்க ளாக - இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்
இப்பொழுதே நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பிரே - எங்கள்
உடவில் இரத்தம் கொதிப்பேறு முன்பே'

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1 தொழிலாளர் விண்ணப்பம்-7)


என்பது பாரதிதாசன் பாடல். உழைத்துண்பவர் நாலாம் சாதியாய், ஐந்தாம் சாதியாய் ஒதுக்கப்பட்ட அநியாயம் கண்டு பாவேந்தன் எரிமலையாய்ச் சீறுகின்றான். மாந்தர் குலத்தை "நின்றது போதும்! முன்னேறுக" என்று ஆவேசமிக்க