பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

345



"வாங்குவோர் களிப்படையும் வண்ணம் களிப்பாக்குத் தருதல், முன்கடன் வசூலித்துச் சரக்குக் கொள்முதல் செய்தல், முன்பாக்கி தருதல் ஆகியன வாணிகத்தின் நுட்பங்கள்.

வாணிக உலகம் தூய்மையாக இருக்க வேண்டும். சுத்தமான சரக்கினைத் தருதல் வேண்டும். அடக்கவிலை கூறி விற்றல் முதலியன வாணிகச் செயற்பாடுகள்! இந்தக் குடும்பத் தலைவி, இவற்றைப் பெற்று விளங்கும் பெற்றிமையை என்னென்பது! கடைசியாகக் குடும்பத் தலைவன் வருகின்றான். குடும்பத் தலைவி, அவனிடம் கணக்கு ஒப்படைக்கும் பாங்கைப் பாவேந்தன் விளக்கும் வரிகள் நிதிநிர்வாகத் தொழில் நுட்பம் சார்ந்த செய்திகள் அடங்கியவை: கடன் கொடுத்த இனங்களுக்குரிய தண்டல், ரொக்கத்திற்கு விற்ற முதல் தனியே வைத்தல். என்ற நிர்வாக ஒழுங்கியல்களைத் தாங்கியவை.

'கொண்டவன் வந்தான், கண்கள்
குளிர்ந்திடக் கண்டாள்!” அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்! விற்று
முதலினைத் தனியே வைத்தேன்!

என்பது எண்ணி மகிழத்தக்கது.

தாய்மையின் மாண்பு

இந்த உலகில் அமைதி தழுவிய வாழ்க்கையை விரும்பாதவர் யார்தான் உண்டு? அமைதியான வாழ்க்கையை அடைய என்ன செய்ய வேண்டும்? அந்த வழியும் அருமையானதாக இல்லாமல் எளிமையானதாக இருக்கவேண்டும். ஆம்! பாவேந்தனை - புரட்சிக் கவிஞனை அணுகி இதற்கு வழி கேட்போமே! பாவேந்தனும் அமைதி