பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலைத்திட இலேசான ஒரு வழியைக் காட்டுகின்றான். இதோ பாவேந்தன் அமைதிக்குக் காட்டும் இலேசான வழி!

"இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இயேசுவழி ஒன்றுண்டு பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்"

(குடும்ப விளக்கு பக். 199)

அன்பு ஆழமானது. அன்பு தூய்மையானது. அன்பு ஆற்றல் மிக்கது. அதுவும் தாயன்புக்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை. கடவுள், மானுடத்திற்கு உதவ எடுத்த வடிவம் 'தாய்' என்று சொன்னால் பொருந்தும். தாய், குழந்தையின் நோய்க்குத் தானே மருந்துண்பாள். பத்தியம் இருப்பாள். தாய், தன்னைப்பற்றிக் கவலைப்படாள். தன் சேயைப் பற்றியே அவளுக்குக் கவலை. குடும்ப விளக்கில் ஒரு காட்சி! குடும்ப விளக்கின் தலைவி, தன் குழந்தையை அணைத்தவாறு தூங்குகிறாள்! அயர்ந்து தூங்குகிறாள்! தலைவனுக்குத் தலைவியை எழுப்ப எண்ணம். அதனால் தலைவி, சூடிக் களைந்தெறிந்த மலர்ச் சரத்தைத் தலைவன் எடுத்து அவள் முகத்தில் எறிகிறான். அவள் விழிக்கவில்லை. பின் மலர்ச்சரத்திலிருந்து உதிர்ந்த மலரிதழ் ஒன்றைக் குழந்தை மீது போடுகின்றான். தூங்கிக் கொண்டிருந்த தாயின் கை உடனே மதலையின் மீது விழுந்த மலரிதழைத் துடைத்து எறிந்து மீண்டும் அதன் இடம் போயிற்று! என்ன அருமையான காட்சி!

"மங்கையை எழுப்பு தற்கு
வழியொன்று கண்ட றிந்தான்!
அங்கவள் களைந்தெ றிந்த
மலர்க்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
சேயிழை விழித்தா ளில்லை!
மலர்கண்ணி தனில்அ விழ்ந்த