பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

351


இன்றுநான் அடைந்த நோய்க்கு
நன்மருந் திட்டுக் காத்தாள்"

என்றும் மாமியார் மெச்சும் மருமகளைக் குடும்பவிளக்கில் காண்பீர். இன்று கண்டபடி மாத்திரைகள் தின்பதால் பலருக்கும் நோய் வளர்கிறது! நமது பெண்கள் அவர்களுடைய தமிழ் மரபு மருத்துவத்தினை என்று அறிவர்? என்று உணர்வர்: அன்றே தமிழர்க்குப் பொற்காலம்!

வாழ்வின் வீடு

வாழ்நிலை அரும்பாகி மலராகி, காயாகி, கனியாகி முதிர்வதைப் போல, வாழ்க்கையும் முதுமையடைகிறது. இந்த வாழ்க்கைப் படிகளில் முறையாக வளர்ந்து செழுங் கிளைகளுடன் தழைத்து வளர்வதே வாழ்வியற் சிறப்பு. இங்கனம் நிறைவுறும் வாழ்வே வீடு என்று பாவேந்தன் கூறுவதைக் கேளுங்கள்!

"அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந் தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்ப மேதும்
இல்லாமல் மக்கள் பேரர்
வதிந்திடல் கண்டு நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு"

(குடும்ப விளக்கு - பக். 20)

வேலைவாய்ப்புப் பெருக வேண்டும் மானுடம் தோன்றிய நாள் தொட்டு உழைத்து வேலை செய்து பொருள்களைப் படைத்து நுகர்ந்து வாழ்தல் என்பது பரிணாம வளர்ச்சி. எல்லாருக்கும் தொழில் வேண்டும். தொழிலின்மையே வறுமையாகும். இன்று நமது நாட்டை