பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

353


என்ற கவிதைகளைப் பலகாலும் படிக்கவேண்டும்: ஒழுக்க மாக்குதல் வேண்டும். ஏன்? சாதியில் உயர்வு - தாழ்வு நீங்கின அளவிற்குக்கூட நன்மை உண்டு, உயர்வு உண்டு என்பது பாவேந்தனின் எண்ணம்.

"இம்மக்கள் தமக்கு மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்"

(குடும்ப விளக்கு - பக். 61)

என்பதை அறிக.

ஏற்றத்தாழ்வு

சாதிகுல இழிவு மட்டும்தானா? செல்வம் உடையார் - இல்லாதார் ஏற்றத்தாழ்வால் ஏற்படும் இழிவையும் காட்டுகின்றான் பாரதிதாசன். ஏற்றத்தாழ்வின் கொடு முடியாக ஓர் ஆளை வண்டியில் வைத்து, ஆள் இழுக்கும் கேவலம் தோன்றியமையை நினைந்து வெதும்பிக் கவிதை களில் தெரிவிக்கிறான் பாவேந்தன்.

"கல்வி தன்னினும் செல்வம் தன்னினும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்! இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்"

(குடும்ப விளக்கு - பக் 5)

பாவேந்தனின் இந்தப் பாடலுக்குச் செயலுருவம் கொடுத்த பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கு உண்டு. அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன்