பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆள் இழுக்கும் வண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

சுற்றுப்புறத் தூய்மை

வாழ்வு இனிதாக அமையச் சுற்றுப்புறச் சூழ்நிலை சுத்தமாக அமையவேண்டும். ஈக்கள் நோய் பரப்பிகளாகும். ஈக்களை ஒழிப்பது தலையாய கடமை.

{{block_center|

"ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும் - தீமையம்மா"

( குடும்ப விளக்கு - பக். 45)

இஃதோர் இனிய பாடல்! அருமையான அறிவுரை!

பனை-நட்புக்கோர் உவமை

வாழ்க்கையை இயக்கும் உணர்வுகள் இரண்டு. ஒன்று காதல்! மற்றொன்று நட்பு! காதல் உணர்வு ஆண் பெண்பாலார்க்கிடையே நிகழும் மென்மையான உணர்வு: ஆழமானது ஆற்றலுடையது. நட்பு, பால் வேறுபாடின்றி நிகழ்வது. ஒருவன் காதலிக்காமல் கூட வாழ முடியும். நட்பு இல்லாமல் வாழ முடியாது. நட்பு - ஆம்! அஃதோர் அற்புதமான உந்துசக்தி!! உணர்வு! மருந்து! பாவேந்தன், நட்பை - உவமையால் விளக்கும் முறை அற்புதமானது. பனை மரத்தை நட்புக்குச் சான்றாக விளக்குகின்றான்! ஆம்! ஒருவன் தன் இளமைக்காலத்தில் பனம்பழம் தின்று ஏரிக் கரையில் போட்ட பனங்கொட்டை, பனைமரமாக வளர்ந்தது. தண்ணிர் கேட்காமல் தானே வளர்ந்தது பனைமரம்! ஏன் காப்புக்கூட எதிர்பார்க்கவில்லை! தானே வளர்ந்த பனைமரம் உரிமையோடு நூங்கும் சாறும் தந்து உரமூட்டுகிறது: வளர்கிறது: வாழ்விக்கிறது! வெப்பம் தாக்காமல் விசிறியாக நின்று பாதுகாக்கிறது. ஆம்! நல்ல நண்பர்கள், எதிர்பார்த்து நண்பர்களாவதில்லை. தாமே வளர்வர்; வாழ்வர். நமக்கு வேண்டிய உதவிகளை நாம்