பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

355


எதிர்பார்க்காமலே செய்வர். கைம்மாறும் எதிர்பார்க்க மாட்டார்கள். இதுவே நட்பு.

"ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்
பருவத்தில் இட்ட கொட்டை
நீரேதும் காப்பேதும் கேளாமல்
நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின்
வாராய்என் றெனைஒலை விசிறியினால்
வரவேற்று நுங்கும் சாறும்
சீராகத் தந்ததெனில், பனைபோலும்
நட்புமுறை தெரிந்தா ருண்டோ!

(குடும்ப விளக்கு - பக். 80-81)


இத்தகு நட்புக் கிடைப்பின் வேறு என்ன வேண்டும்?


தீமை கண்டு ஒதுங்குதல் தீமை


சமூகம் ஒரு அமைப்பு இயக்க நிலையில் உள்ள அமைப்பு. இந்தச் சமூக இயக்கத்துடன் ஒருங்கிணைந்து ஓடாத வாழ்வு பயனற்றது. ஊர்திகள் தடங்களிலும் சமூகம் நியதிகளின் வழியும் செல்ல வேண்டும். சமூக நியதி புறக்கணிக்கப்படும்பொழுது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கும். சமூக நியதிகளை வழுவாமல் பின்பற்ற வேண்டும். சமூக நியதிகளிலிருந்து மறந்தும் வழுவுதல் கூடாது.

இன்றைய சமூகத்தில் பலர், பயந்தாங்கொள்ளிகளாயிருக்கின்றனர். அது அவர்களின் பிறவிக்குணம் போலும், பயம் மிகமிகத் தீயகுணம். பயம் மனிதனைக் கோழையாக்கி விடுகிறது. மனித உலகத்திலிருந்து ஒதுக்கி விடுகிறது. பயம் அறிவைக் கொன்றுவிடுகிறது. ஆளுமையை அழித்து விடுகிறது! தீமைகளிலெல்லாம் தீமை பயம். இந்தப் பயத்திலிருந்து மனித உலகத்தை மீட்பதே பெருந்தொண்டு! பயத்திலிருந்து மனிதனை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை! வாழ்க்கைக்கு ஒப்புறுதி உத்தரவாதம்