பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியாமல் உடல் இளைத்து நிற்கிறது! ஒற்றைக் காலில் நின்று பெருஞ்சுமையைத் தாங்குகிறது. தமிழர்க்குத் தேங்காய், குளிர்நீர், கூரை மறைக்கும் ஒலையெல்லாம் தந்து புகழ் பெற்று நிற்கிறது. இதுபோல நல்லோர்கள் தாம் பசித்திருந்தாலும் பிறர் பசி தீர்க்கவே இலை விரித்துச் சோறிடுவர். இது தமிழ் மரபு! தம்மை மீறியும் அறம் செய்யும் தமிழ் மக்களின் மனநிலையில் அயல் வழக்கு ஊடுருவி "தனக்கு மிஞ்சியது தான தர்மம்" என்ற இழிநிலைக்குத் தள்ளியது. மீண்டும் நல்லோராக வாழ்வோம். தென்னை மரம் போல் பயன்பட வாழ்வோம்.

தலைவிரித்தாய் உடல்இளைத்தாய்
ஒற்றைக்கா லால்நின்றாய்
தமிழ்நாட் டார்க்குக்
குலைவிரித்துத் தேங்காயும்
குளிரிளநீ ரும்கூரைப்
பொருளும் தந்தாய்
கலைவிரித்த நல்லார்கள்
தாம்பசித்தும் பிறர்பசியைத்
தவிர்ப்ப தற்கே
இலைவிரித்துச் சோறிடுவார்
என்பதற்கோர் எடுத்துக்காட்
டானாய் தெங்கே!

இந்தக் கவிதையின் அருமையையும் அழகையும் சிந்தித்துப் பாருங்கள்.


முடிவுரை

பாரதிதாசனின் குடும்ப விளக்கு ஒரு சிறந்த காப்பியம். இந்தக் காப்பியத்தைத் திறனாய்வு செய்வது இந்தச் சொற்பொழிவின் நோக்கமன்று. குடும்ப விளக்குக் காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம்! ஏன்? தமிழகத்தில் தமிழ்க் குடும்பங்கள் பாவேந்தனின் குடும்ப விளக்கின் அமைவில் அமைய-