பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

361


வேண்டும். அதுவே, பாவேந்தனுக்கு - புரட்சிக் கவிஞனுக்குச் செய்யும் நன்றி! கடப்பாடு!

பாவேந்தன் புகழ் வாழ்க!
குடும்ப விளக்கின் ஒளி பரவுக!


5. பாரதிதாசனின் உலகம்

பேரன்புக்கும் பெருமைக்குமுரிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ச. முத்துக்குமரன் அவர்களே! தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மா. இராமலிங்கம் அவர்களே! இனிய அன்பிற்குரிய பேராசிரியப் பெருமக்களே! நண்பர்களே! சகோதரர்களே!

பாவேந்தன் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பாவேந்தன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் நூற்றாண்டு விழா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்தும் பேறு கிடைத்தமையை எண்ணி மகிழ்கின்றோம். வாய்ப்புக்கு முதலாக இருந்த அறக்கட்டளையினருக்கும் துணையாக அமைந்த பல்கலைக்கழகத்தாருக்கும் நன்றி! பாராட்டு!

முன்னுரை

பாவேந்தன் பாடல்கள் இன்றையத் தமிழகத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது நமது விழைவு விருப்பம். என்ன நடக்கப் போகிறது! பாவேந்தன் பாடல்கள் தமிழகத்தை வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையோடு பேசுகின்றோம். செயல், நாட்டு மக்களினுடையது; இன்றைய இளந் தலைமுறையினருடையது. வரலாற்றின் மேல் விழிவைத்துப் பார்ப்போம்!

பாரதிதாசன், கவிதைகளை - மரபுவழிக் கவிதைகளை இயல்பாகவே எழுதிக் குவிக்கும் தனித்திறன் பெற்ற கவிஞன். 'பாவேந்தன்' என்ற பெயர் நூற்றுக்கு நூறு பாரதிதாசனுக்குப்

கு.VI.24.