பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இடியட்டும்! மீண்டும் வலிமை பொருந்திய வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்ளுங்கள்! முன்னேற்றத் திசையில் முன்னேறுங்கள்! வானை இடிக்கும் இமயத்தின் உச்சியில் ஏறி நின்று பாருங்கள்! உலக மானுடத்தைப் பார்த்துப் பரவசமடையுங்கள்! உலக மானுடம் உன்னுடன் பிறந்த பட்டாளம் என்று உறவு முறையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


"...நடத்து லோகத்தை!
உன் விடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிக ளிடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு: வானை இடிக்கும் மலை மேல்
ஏறு: விடாமல் ஏறு! மேன் மேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்:”

பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி பக்149-50)


இவ்வாறு பரந்து விரிந்த வாழ்க்கையையும், இதற்கு மாறான சின்னப் புத்திகொண்ட வாழ்க்கையையும் உருவகப்படுத்திப் பாருங்கள்! பாவேந்தன் விளக்கியுள்ள அருமைப்பாடு ஆயிரம் தடவை படித்தாலும் சுவை தரும்.


கடுகு? துவரை? தொன்னை?

உணவிற்கு கடுகு சேர்ப்பது, மணம் சேர்ப்பதற்காக! ஆனால், உணவில் கடுகின் அளவு கூடினால் சுவை கெடும்! உணவின் தன்மை கெடும்! உணவு நஞ்சாகும்! அதுபோல, மனிதர் களிப்புடன் வாழ மனைவி, மக்கள், பொருள்