பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழி. ஆதலால் "பைந்தமிழ்” என்று பாவேந்தன் பாராட்டுகின்றான். "பைந்தமிழ் பயிலுக!” என்பது பாவேந்தனின் வாக்கு இந்த ஆத்திசூடிக்கு பாவேந்தனே உரையும் எழுதினான். அந்த உரையில் "ஆரியம் போன்று, தமிழ் சார்பு மொழியன்று” என்று உரையெழுதி விளக்குகின்றான். இன்று தமிழின் தனித்தன்மை பேணப்படுகிறதா? இல்லை, ஏன்? நமது மொழியின் தனித்தன்மையை இழப்பது வரவேற்கத் தக்கதா? இல்லை, இல்லை! எந்த விலை கொடுத்தும் தமிழின் தனித்தன்மை காப்பாற்றப்படுதல் வேண்டும். இயற்கையில் தோன்றிய மொழி தமிழ் தொன்மையான மொழி என்பதையும் இயற்கையில் தோன்றி வளர்ந்த மொழி என்பதையும் பாவேந்தன் சொல்லாய்வுகள் மூலம் விளக்குகின்ற பாங்கு அறிந்துணரக்கூடியது. காக்கையின் "கா" என்ற சொல்லும் கருமுகிலின் "கடாமடா" என்ற சொல்லும் கிள்ளையின் "அக்கா” என்ற சொல்லும் வஞ்சப் பூனையின் "ஞாம் ஞாம்” என்ற சொல்லும் கழுதையின் "ஏ" என்று கத்துதலும் இயற்கையில் தோன்றிய மொழி என்பதற்குச் சான்றாகி விளங்குவதைக் காட்டும் பாடலைப் படித்து அனுபவி யுங்கள்:

"காக்கை 'கா' என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்! ஒரு கருமு கில்தான் நோக்கியே 'கடமடா என்றே தன் கடனுரைக்கும்! நுண்கண் கிள்ளை வாய்க்கும் வகை அக்கா என் றழைத்ததனால் வஞ்சத்துப் பூனை ஞாம் ஞாம்! காக்கின்றோம் எனச் சொல்லக் கழுதை அதை 'ஏ' என்று கடிந்து கூவும்!” (தமிழியக்கம் பக்.54)