பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

393



ஒழித்து மறுவேலை உன்னுதல் வேண்டும் தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும் நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்.” (குறிஞ்சித்திட்டு. பக்.31-312)

என்று பாரதிதாசன் இடித்துரைப்பதை எண்ணுக.

தமிழ் பயிற்று மொழி

தமிழர் ஆக்கம், தமிழ் வழிக் கல்வியின் வாயிலாகத் தான் என்பதால் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை ஒவ்வொருவரும் தவறாமல் கற்க, சட்டம் செய்யவேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம். தமிழர் நெறி தமிழருக்குத் தேவை என்பதறிந்து தமிழையும் தமிழனையும் காப்பாற்றமுடியும். எல்லாரும் தமிழ்வழிக் கல்வி கற்க, அரசு சட்டமியற்றினால் மட்டும் போதாது. சலுகைகளும் தந்து ஊக்குவிக்க வேண்டும். இன்றைய தமிழ்நாட்டில் இதுதான் இல்லை! ஏன் தமிழ் வழியாகக் கற்பவன் கிராமப்புற தமிழன். இவனுக்கு எந்த வசதியும் இல்லை; பணி வாய்ப்பும் இல்லை. இது பிழைபட்ட நிலை! தமிழ்வழிக் கல்வியைத் தமிழ் நாட்டரசு ஊக்குவிக்க வேண்டும். தமிழ் வழிக் கற்று வருவோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்கவும் துணிவில்லை. ஏன்? 1972-73-இல் அன்று தமிழக முதல்வராக இருந்த பாராட்டுதலுக்குரிய டாக்டர் கலைஞர். தமிழ் வழிப் பயின்றோர்க்குத் தமிழ்நாடு அரசில் முன்னுரிமை கொடுத்து அரசாணையும் பிறப்பித்தார்! ஆனால் தமிழக மக்கள் ஆங்கிலப் பற்றார்வத்தின் காரணமாக அந்த ஆணையை எதிர்த்தனர். கல்லூரிகள், பள்ளிகளுக்குச் செல்லாமல் மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்தனர். மக்களை, அவர்தம் வழியில் சென்று திருத்தலாம் என்ற நம்பிக்கையில் அப்போது