பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

395



நீ தாமதிக்காதே தேரோட்டம் முடிந்த பிறகு திருவிழாக் காணவரும் ஒரு பக்தனைப் போல் - வண்டி போன பிறகு நிலையம் வந்து சேரும் ஒரு பயணியைப்போல் - நோயாளி மடிந்த பிறகு மருந்து வாங்கி வரும் ஒரு சொந்தக்காரனைப்போல் - நீ காலங்கழித்து வராதே! பிறகு வருந்தாதே! (கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் பக்.70-மீரா)

இங்ஙனம் தோன்றும் புதுக் கவிதைகளுக்கும் இலக்கணம் செய்ய வேண்டும். இலக்கணம், இலக்கிய வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் துணை செய்ய வேண்டும். பாவேந்தன் "இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று கூறுவதை நினைமின்! தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்த நூற்றாண்டு இலக்கியங்களுக்கு இலக்கணங்களை உருவாக்க முன்வரவேண்டும்.

பாவேந்தன் செந்தமிழைக் கற்றவன்; உணர்ந்தவன். ஆயினும் செந்தமிழ், செழுந்தமிழாக இல்லையே என்று கவலைப்பட்டுச் செந்தமிழைச் செழுந்தமிழாக வளர்க்கும் பணியில் ஈடுபட ஆணையிடுகிறான். வெளியுலகில் நாளும் வளர்ந்துவரும் புத்தம்புதிய அறிவியல் நுட்பங்களுக்குத் தமிழ்ச் சொல்லைத் தேர்ந்து தெளிந்து பயன்படுத்தியும், எளிதில் விளங்கும் வரைபடங்களுடனும் தமிழில் பலப்பல சுவடிகள் வரவேண்டும். இது பாவேந்தனின் ஆர்வம்! இன்று இத்தகைய முயற்சிகள் முகிழ்த்ததன் விளைவாக, "கலைக்கதிர்", "வளரும் வேளாண்மை", "துளிர்", "அறிக