பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எதிர்பார்த்திருக்க வேண்டாம். இப்பல்கலைக் கழகம் பாவேந்தன் கண்ட தமிழகத்தை உருவாக்கும் தலைவர்களை உருவாக்குக! தமிழர் குறை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் தீர்ந்ததாக வரலாறு புகழ்ப் பரணி பாடட்டுமே!

வரலாறு தொடரட்டும்!

தமிழகம் படையெடுப்புக்களைக் கண்டதில்லை. தமிழ்நாடு இயற்கை வளம் நிறைந்த நாடு; நற்றமிழ் வளர்ந்த நாடு; கவிஞர்கள் பலர் தோன்றிக் கற்கண்டுத் தமிழை வளர்த்த புகழ்மிக்க நாடு; தொழில்கள் பல நடந்த நாடு - நடக்கும் நாடு; புதிய புதிய தொழில்கள் அமையப்பெற்று வளர்ந்த நாடு - வளரும் நாடு. இந்தப் புகழ்மிக்க மரபு, தொடர் வரலாறாக அமையும்படி செய்வது நமது கடமை.

"எவர்படை யெடுப்பும் இன்றி
இயற்கையால் வளர்ச்சி பெற்ற
நவையிலாக் குறிஞ்சித் திட்டு
நற்றமிழ் வளர்ச்சி பெற்றும்
கவிஞர்கள் பலரைப் பெற்றும்
கைத்தொழில் வளர்ச்சி பெற்றும்
குவிபுதுத் தொழில்க லைகள்
கொளப்பெற்றும் வந்த தாகும்"
(குறிஞ்சித்திட்டு -பக்.5)

இந்த வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள்.

நமது கடமை!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்க்குடியின் வரலாறு எப்படிக் கெட்டது? ஏன் கெட்டது? தமிழர்கள் வெள்ளையுள்ளம் படைத்தவர்கள்; எளிதில் எதையும் நம்புவார்கள்! அதனால், செழுந்தமிழ் வழக்கு சீர்கெடும் வகையில் அயல் வழக்கு ஊடுருவியது. தமிழர். ஒரு கடவுட் கொள்கையுடையவர்கள். இதற்கு மாறாக