பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குடை பிடிக்க முடியுமா?” என்று அறியாமையின் வடிவமாக - ஆனால் வாதத் திறமை போலப் பேசுகிறாள்.

ஆனால், பார்வதியின் வாயிலாக அறிஞர் அண்ணா பேசுகிறார்; சமதர்மத்துக்காக வழக்காடுகிறார்; வாதாடுகிறார், "மானைத் தின்று புலி கொழுப்பது போல் ஏழையின் உழைப்பை உறிஞ்சி முதலாளி கொழுக்கிறது யாருக்குத் தெரியும்? ஈவு இரக்கம் தயவு தாட்சண்யம் என்பவைகளைப் படுபாதாளத்திலே போட்டு விடுபவர்கள்தான் நாலடுக்கு, ஐந்தடுக்கு மாளிகையிலே உலாவுகிறார்கள்.

நமக்கு என்ன என்றிருக்க இந்த உண்மையை உணர்ந்த பிறகு மனம் எப்படி இடம் கொடுக்கும். தொட்டிலிலே தூங்கும் பாலகனை, கொட்டிடத் தேள் போனால், தேளை அடிக்காதிருப்பது நியாயமா?” என்று பார்வதியின் மூலம் நியாயம் கோருகிறார், குபேர உலகத்தைச் சார்ந்த மனிதர்களைப் பார்த்து அறிஞர் அண்ணா!

அரசியல் வானில் காரல்மார்க்ஸின் சிந்தனையும், வள்ளுவத்தின் சிந்தனையும் பிரஞ்சு புரட்சியும், சமதர்மச் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கின்றன. இன்று எங்கும் அந்தப் பேச்சு! செல்வச் சீமான்களும் சமரசம், சன்மார்க்கம், சமதர்மம் இவைபற்றி ஓயாது பேசுகின்றனர். இஃது உண்மையான ஆர்வமா? இல்லை என்றார் அறிஞர் அண்ணா.

சில சொற்களால் இதைக் கேலி செய்கிறார். "சீமானின் சமதர்மப் பிரச்சாரம் ஓய்வு நேர உல்லாசம்” என்கிறார். அதே நேரத்தில் ஏழைகளைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறார். அவர் எச்சரிக்கை சமதர்மம் ஒன்றே ஏழைகளின் வாழ்க்கைத் தோணி" என்பதாகும்.

புதுதில்லியில் 1947-ல் அண்ணல் காந்தியடிகள் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் சமூகத்தைப் பிடித்திருக்கின்ற ரோகத்தைப் பற்றிப் பேசினார். அதே கருத்தை அறிஞர்