பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்கிறார். இன்று நம்முடைய சமய நிலையங்களைச் குழ்ந்திருக்கிற குறைகளுள் தலையாயது, மடைப்பள்ளி ஆட்சியேயாகும். ஐம்புலன்கள் ஆர அருளாரமுதத்தை அனுபவிக்க வேண்டிய திருக்கோயில்களில் பொறிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலை! கவிஞர்,

"பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும்
சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே
பஜனையில்லே

என்று பாடுவது சிரிக்கவும் தூண்டுகிறது - சிந்திக்கவும் தூண்டுகிறது. -

அன்பு மழை பெய்தால் இறையருள் வெள்ளம் பாயும் என்று கூறுகின்றார். இக் கருத்து, "வஞ்ச ஆறுகள் வற்றின, பக்தி வெள்ளம் பரவிற்று” என்ற அப்பரடிகள் கருத்தை நினைவூட்டுகிறது. கவிஞருடைய கவிதையில் உணர்ச்சிகளுக்கு மாறாக அமைதி தவழ்வதைப் பார்க்கிறோம்.

"சோதியிறையருள் ஆறு பாயவே, அன்பு மழை
பெய்யவே, பேதம் மறைந்து உய்யவே"

என்று கவிஞர் பாடும்போது தூய அமைதியைக் காண்கிறோம்.

இறைவனுடைய பக்தியில் ஈடுபட்ட அடியார்கள் எல்லாவற்றையும் இறைவன் மயமாகப் பார்த்தனுபவிப்பார்கள்.

'இருநிலனாகித் தீயாகி' என்று அப்பரடிகள் பாடுவார். 'வானாகி மண்ணாகி என்று மாணிக்கவாசகர் இறைவனை வாழ்த்துவார்.

நம்முடைய கவிஞரும்,

"விண்ணும் மண்ணும் நீயானாய்,
வெயிலும் மழையும் நீயானாய்,"