பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பொழுதை விடியச் செய்வோம்

பட்டுக்கோட்டைப் பாவலன் - கவிஞன் நமது தலை முறையில் தோன்றிய சிறந்த கவிஞன். பட்டுக்கோட்டையின் தோற்றம் காலத்தின் கட்டாயம், காலம் தந்த கவிஞன் அவன். இல்லை, இல்லை அவன் காலத்தை உருவாக்கப் பிறந்தவன்; பாடியவன். ஆனால் வழக்கம்போல அவன் விரும்பிய காலம் உருவாகவில்லை! மக்கள் என்று பொழுது விடியும் என்று காத்துக்கிடக்கின்றனர். ஐயோ, பாவம்! அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை. பொழுது தானே விடியாது என்று! மக்கள் சக்தி எழுந்து பொழுதை விடிய வைக்க வேண்டும். அந்த எழுச்சியை - விழிப்புணர்வைத் தரம் பாடியவன் கவிஞன் பட்டுக்கோட்டை.

மனித சக்தியைப் பாடிப் புகழ் பெற்றவன் பட்டுக்கோட்டை கவிஞன் மனித சக்தியை,

"சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி
சரித்திரத்தை மீறியது மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின் அரச னென்ற

இலக்கணத்தைத் திருத்தியது மனித சக்தி"