பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரே சாமிதான்! இந்தப் புத்தி நமக்கு முதலில் வந்தாக வேண்டும். சாமியையும் மதங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

"ஊருக் கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா"

ஊருக்கெல்லாம் சாமியும் ஒன்றுதான்! நீதியும் ஒன்றுதான்! ஆனால் சாமியைச் சாப்பிட்டு ஜீரணித்துவிட்ட மதங்கள், மதங்கள் வாரியாக நீதிகளை அமைத்துக் கொண்டுள்ளன. இன்று நீதி மதங்கள் தோறும் மாறுபடுகின்றது. இது நியதியுமல்ல; நீதியுமல்ல. ஊருக்கெல்லாம் ஒரே சாமி என்ற பாட்டிலேயே உலகம் முழுதும் ஒருமையில் நிற்கும் நிலையையும் உணர்த்திப் பாடுகின்றான். "ஒரே ஜாதி” என்று பேசுகின்றான். ஆம்: மனித ஜாதி ஒரே ஜாதி தான்! அதுமட்டுமல்ல.

மூச்சுக் கெல்லாம் ஒரே காத்து
ஒரே காத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா!"

என்று பாடுகின்றான். உலகம் முழுதும் வாழும் மாந்தர் சுவாசிக்கும் காற்று ஒன்று. குடிக்கும் தண்ணீர் ஒன்று. வாழும் பூமி ஒன்று. இருளும் ஒளியும் எல்லாருக்கும் உண்டு. இவற்றில் வேறுபாடு இல்லை. எல்லாருடைய உடம்பிலும் ஒடும் இரத்தம் ஒன்றேதான்! ஏன், எல்லா மாந்தரும் பிறந்தது பத்து மாதம் தானே! இங்ஙனம் பரந்த உலகியலை, உலகியலின் ஒருமைப்பாட்டை பட்டுக்கோட்டைக்கு முன்பு இவ்வளவு எளிதாக யாரும் பாடியதாக நினைவில்லை. அற்புதமான பாட்டு, இந்தப் பாட்டும் பாட்டின் பொருளும் வாழ்வாக