பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

441


நினைந்து அழுது புலம்பி ஓய்வனவும் படிக்கத்தக்க இலக்கியங்கள் அல்ல. மானுடத்தை உறக்கத்தினின்று எழுப்பி முன்னேற்றத் திசையில் உசுப்பிவிடுவனவே மறுமலர்ச்சி இலக்கியங்கள்!

பழைமையை வெறுத்துப் புதுமையை நாடும் உணர்வு மானிடத்திற்கு இயல்பாகவே உண்டு! இந்தப் புதுமையை நாடும் வேட்கையினால்தான் மானிடன் தனது உணவில், உடையில், வழிபாட்டில் புதியன பலவற்றைக் கண்டிருக்கின்றான்!

யுகந்தோறும் கடவுளைக்கூட மாற்றும் மனப் போக்குடையவன் மானிடன்! ஆனால், கடவுளை மாற்ற அவனால் முடியவில்லை! அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான்! ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை! சங்க காலத்திலேயே மறுமலர்ச்சி வேகம் வந்துவிட்டது!

"ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்!
இன்னா தம்ம இவ் வுலகம்!
இனியகாண்க, இதன் இயல்புணர்ந்தோரே!"

(புறம் - 194)

என்ற சங்ககாலப் பாடலும்,

"......................மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

(புறம் - 192)


என்ற பாடலும் சங்ககாலத்தில் மறுமலர்ச்சிக்கு துணையாய்

அமைந்த பாடல்கள்! முடியரசுகள் செல்வாக்காக இருந்த

கு .VI. 29.