பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூற்றாண்டில், அரசனது ஆணை தெய்வீக ஆணை என்றிருந்த காலத்தில் அப்பரடிகள் அரசனின் ஆணையை எதிர்த்து முழங்கினார்.

     "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
     நரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்
     ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்
     இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!

     தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
     சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
     கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
     கொய்ம்மலர்ச் சேவடிஇணையே குறுகினோமே!”

(ஆறாம் திருமுறை 90)

என்ற பாடல், முடியாட்சியை எதிர்த்து குடியாட்சிக்கு வரவேற்புக் கூறிய பாடல் அன்றோ? திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும்!

இந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு தமது படைப்புக்கள் மூலம் உயிரளித்து வருபவர்களில் முன்னோடியாக விளங்குபவர் கவிஞர், எழுத்தாளர் குலோத்துங்கன் ஆவார். அறிவியல் மேதை வா. செ. குழந்தைசாமியின் புனைபெயர்தான் குலோத்துங்கன் என்பது. நமது வாழ்க்கையில் மிகவும் அருமையாக - உயர்வானதாகக் காக்கப்பெற வேண்டியது, காலம்! இன்று, நம் மக்களிடத்தில் காலத்தின் அருமைப்பாடு உணரப் பெறவில்லை! இன்று நம்நாட்டில் மலிவாகச் செலவழிக்கப்படுவது - களவாடல் செய்யப்படுவது காலமேயாம்! கவிஞர் குலோத்துங்கனின், காலத்தின் அருமையை உணர்த்தும் கவிதை அருமையானது. இந்தக் காலத்தில் வாழும் நாள்கள் சில. இந்தச் சிறிய கால எல்லைக்குள் அறிந்துணர வேண்டிய உண்மைகள் பல உள்ளன. சலிப்பின்றி உழைக்கின்ற